கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் 2021-2022ஆம் ஆண்டின் பட்டப்படிப்பு மற்றும் பட்டய படிப்பின் தரவரிசைப் பட்டியலை ஜன.28ஆம் தேதியான இன்று வெளியிட்டது. அதன்படி, 2021-2022ஆம் கல்வி ஆண்டிற்கான பட்டியலில்,
மாணவி பூர்வஸ்ரீ (நீலகிரி மாவட்டம்) 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளார். தொடர்ந்து, மாணவி புஷ்கலா (நாமக்கல் மாவட்டம்) 199 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடமும், மாணவர் சஜின் (ராமநாதபுரம் மாவட்டம்) மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
மேலும், அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் படி, மாணவி அனுஜா (திண்டுக்கல்) முதலிடமும், மாணவர் ஜெரால்ட் எடிசன் (புதுக்கோட்டை) இரண்டாமிடமும், மாணவர் ராம்பிரசாத் (நாமக்கல்) மூன்றாமிடமும் பிடித்துள்ளனர்.
சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு பிப்.11ஆம் தேதி முதல் நேரடியாகவும், பொதுக்கலந்தாய்வு 21ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை 3 நாட்கள் இணையவழியிலும் நடைபெறும் எனப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: கர்நாடக முன்னாள் முதலமைச்சர் பி.எஸ்.எடியூரப்பாவின் பேத்தி தற்கொலை