ETV Bharat / city

தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பு சார்பில் போராட்டம் - Protest on behalf of the Tamil Nadu Deaf Federation

அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களில் சைகை மொழியை அமல்படுத்தி அரசாணை வெளியிட வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பினர் கோயம்புத்தூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் போராட்டம் நடத்தினர்.

போராட்டம்
போராட்டம்
author img

By

Published : Jul 1, 2022, 7:25 PM IST

கோயம்புத்தூர்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பு சார்பில் தமிழ்நாடு முழுவதும் காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

அரசு அல்லது தனியார் வேலைவாய்ப்பில் 1% இன் படி வேலை வாய்ப்பு வழங்கிட வேண்டும், வறுமைக் கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கு தொகுப்பு வீடு வழங்கிட வேண்டும், மாதாந்திர உதவித் தொகையை ரூ.3,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும், ஆவின் பாலகம் அமைத்துக் கொடுக்க வேண்டும், அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களில் சைகை மொழியை அமல்படுத்தி அரசாணை வெளியிட வேண்டும், கொக்கோகோலா (Cocacola) நிறுவனங்களில் ஒப்பந்த காதுகேளாத தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகங்களில் அனுபவம் வாய்ந்த சைகை மொழிபெயர்ப்பாளர்களை நியமனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

போராட்டம்

இதில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கை பதாகைகளை ஏந்தி விசில் ஊதி, கைகளை உயர்த்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு அரசு உடனடியாக தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர்.

போராட்டம்

திருவள்ளூர்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு காது கேளாதோர் அமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

இதையும் படிங்க: உலகபுகழ்பெற்ற பூரி ஜெகநாதர் ரத யாத்திரையின் புகைப்படம்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.