ETV Bharat / city

கோவையில் மோடி பிறந்தநாளுக்கு எதிர்ப்பு - கடையடைப்பு போராட்டம் - பாஜக கோவை மாவட்டம் ஆட்டோ தொழிலாளர் சங்கம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பிரதமர் மோடி பிறந்தநாளுக்கு கடைவீதி உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து கடை அடைப்பு செய்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Etv Bharatகோவையில் மோடி பிறந்தநாளுக்கு எதிர்ப்பு - கடையடைப்பு போராட்டம்

author img

By

Published : Sep 17, 2022, 6:40 PM IST

Updated : Sep 17, 2022, 7:14 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி நகர்புற பகுதியில் உள்ள கடைவீதியில் 5,000 மேற்பட்ட கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளன. இந்தப் பகுதியில் ஆட்டோ நிறுத்தம் ஒன்று உள்ளது. பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு இன்று (செப்-17) பாஜக கோவை மாவட்டம் ஆட்டோ தொழிலாளர் சங்கம் BMS நிர்வாகிகள் ஆகியோர் இணைந்து அப்பகுதியில் அனுமதியின்றி பேனர் வைத்தனர்.

கோவையில் மோடி பிறந்தநாளுக்கு எதிர்ப்பு - கடையடைப்பு போராட்டம்

இதற்கு கடை உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொள்ளாச்சி துணை கண்காணிப்பாளர் தீபசுஜிதா தலைமையில் கிழக்கு காவல்நிலையா ஆய்வாளர் ஆனந்தகுமார் சம்பவயிடத்திற்கு விரைந்து நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நிர்வாகிகள் பேனர் அகற்ற எதிர்ப்பு தெரிவித்ததால் போலீசார் அகற்றினர். இருதரப்பினர் இடையே பேச்சுவார்த்தை மூலம் சுமூகம் ஏற்பட்டதையடுத்து கடைகள் திறக்கப்பட்டன. இச்சம்பவத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கபட்டது.

இதையும் படிங்க:பள்ளிவாசலுக்கு அருகே வைக்கப்பட்ட பிரதமர் மோடியின் பேனர் கிழிக்கப்பட்டதால் பரபரப்பு...!

Last Updated : Sep 17, 2022, 7:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.