கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் விஸ்வகர்மா சமூகத்தின் நல அமைப்பின் சார்பில் 17ஆம் ஆண்டு விஸ்வாஸ் வித்யா மகா விஸ்வகர்மா விருது வழங்கும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், மகா விஸ்வகர்மா விருதினை விஸ்வகர்ம சமுதாயத்தைச் சேர்ந்த சிறந்த சிற்பி, நகைப் பணியாளர், பல்வேறு தொழில்புரியும் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 75-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்களுக்கு மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
மேலும், விஸ்வகர்மா சமுதாயத்தைச் சார்ந்தவர்களுக்கு தமிழ்நாடு அரசிடம் சமூக ஒதுக்கீடு வேண்டி கோரிக்கை வைத்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் விஸ்வகர்மா ஜகத்குருபூஜ்யஸ்ரீ சுவாமி சிவாத்மானந்த சரஸ்வதி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார்.