பொள்ளாச்சியில் காவல் துறை சார்பாக சட்டப்பேரவைத் தேர்தலில், மக்கள் பயம் இல்லாமல் வாக்களிக்க ஏதுவாக காவல் துறை கொடி அணிவகுப்பை துணை கண்காணிப்பாளர் கே.ஜி. சிவக்குமார் தலைமையில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
அணிவகுப்பு காந்தி சிலை, பல்லடம் ரோடு, பாலக்காடு ரோடு, கடைவீதி, ராஜா மில் ரோடு வழியாக கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
இந்த கொடி அணிவகுப்பில் பொள்ளாச்சி சரகத்திற்குள்பட்ட ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், மத்திய ரிசர்வ் படை, காவலர்கள் என சுமார் 250க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.