பொங்கல் விழாவையொட்டி, அன்னூர் காவல்நிலையத்தில் காவலர்கள் புத்தாடை உடுத்தி பொங்கலைக் கொண்டாடினார்கள்.
மேட்டுப்பாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பாலமுருகன் தலைமையில் காவல்துறையினர், பாரம்பரிய முறைப்படி ஒரே மாதிரியான வேட்டி, சட்டை அணிந்தும் பெண் காவலர்களும் ஒரே மாதிரியான சேலை அணிந்தும் வந்தனர்.
பின்னர், காவல்நிலைய வளாகத்தில் காவலர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, புதுப் பானையில் பொங்கலிட்டு அங்குள்ள விநாயகர் கோயிலில் வழிபாடு நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து, பாரம்பரிய மிக்க நாட்டு மாட்டு வண்டியைத் துணை கண்காணிப்பாளர் பாலமுருகன் ஓட்டினார். பின்னர், காவல் ஆய்வாளர் நித்தியா மற்றும் காவலர்கள் அதில் பயணம் செய்து பொங்கலைக் கொண்டாடினர்.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அங்கிருந்த பொது மக்களுக்கும் பொங்கல் வழங்கப்பட்டது