கோயம்புத்தூர்: பொள்ளாச்சி பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்ட தின விழாவை முன்னிட்டு, பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டம் தொடங்க முக்கிய காரணமாக இருந்த மேனாள் சட்டப்பேரவை உறுப்பினர் வி.கே.பழனிசாமி கவுண்டர், பாரத ரத்னா சி.சுப்பிரமணியம், மேனாள் சட்டப்பேரவை உறுப்பினர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம், முன்னாள் நீர்வளத் துறை அமைச்சர் பத்மபூஷன் டாக்டர். கே.எல்.ராவ் ஆகியோரின் சிலை பி,ஏ.பி.அலுவலக வளாகத்தில் வைக்க தமிழ்நாடு அரசாணை பிறபித்துள்ளது.
இதையடுத்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் ஒப்புதல் பெற்று கோவை தெற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் மறைந்த மறைந்த பிரதமர் நேரு, முன்னாள் முதலமைச்சர் காமராஜ் ஆகிய இருவருக்கும் சிலை வைக்க கோரி முதலமைச்சர், மாவட்ட ஆட்சியர் சமீரான், துணை ஆட்சியில்தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ் மற்றும் துறைசார்ந்த அலுகர்களுக்கு மனு அளித்துள்ளதாக தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ‘திமுக பொதுக்குழுவில் மனம் வெம்பி பயத்துடனே முதலமைச்சர் பேசியுள்ளார்’ - செல்லூர் ராஜூ