கோவை மாநகர காவல் துறையுடன் இணைந்து உயிர் என்ற அமைப்பு சாலை விதிகளை கடைபிடிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை அவிநாசி சாலையில் நவீன கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் ஸ்மித் சரண் கூறியதாவது, "உயிர் அமைப்புடன் இணைந்து கோவை அவிநாசி சாலையில் ஐந்து சமிக்ஞைகளில் (சிக்னல்) நவீன கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இக்கேமராக்கள் மூலம் சாலை விதிமுறைகளை மீறும் வாகனங்களை துல்லியமாக கண்டறிய முடியும்.
விதிகளை மீறும் வாகன ஓட்டிகளை கண்டறிந்து அபராதம் விதிக்கப்படும். முதல் கட்டமாக ஐந்து சமிக்ஞைகளில் இம்முறை நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது" என்றார்.