ETV Bharat / city

கோவை ரயில் நிலையத்தை ஆய்வு செய்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்

இந்தியன் ரயில்வே கமிட்டி, சேர்மன் ராதா மோகன் சிங் தலைமையில் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோவை ரயில் நிலையத்தில் ஆய்வுமேற்கொண்டனர்.

கோவை ரயில் நிலையத்தை ஆய்வு செய்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்
கோவை ரயில் நிலையத்தை ஆய்வு செய்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்
author img

By

Published : Aug 19, 2022, 10:02 PM IST

கோவை ரயில் நிலையத்தில் இந்தியன் ரயில்வே கமிட்டி சேர்மன் ராதா மோகன்சிங் தலைமையில் 16 எம்.பி.க்களும் மற்றும் கோவை தெற்குத்தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் ஆகியோரும் ஆய்வு மேற்கொண்டனர். ரயில் நிலையத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட அவர்கள் ரயில் நிலையத்தில் உள்ள கைத்தறி ஆடைகளையும் பார்வையிட்டனர்.

இதைத்தொடர்ந்து சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "ரயில்வே ஸ்டாண்டிங் கமிட்டி தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ராதாமோகன்சிங் தலைமையில் 16 எம்.பிக்கள் நேற்று(ஆக.18) கோவை வந்து, இன்று(ஆக.19) கோவை ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர். ரயில்வே அமைப்புகள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் கோரிக்கையை ஏற்று ரயில் நிலையத்தைப் பார்வையிட்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆய்வு
நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆய்வு

’ஒன் ஸ்டேஷன்.. ஒன் புராடெக்ட்’ பிரதம மந்திரியின் திட்டம் எப்படி செயல்படுகிறது என நேரடியாக ஆய்வு செய்தனர். ஒவ்வொரு 15 நாட்களுக்கும் இந்த மாவட்டத்தில் உற்பத்தியாகின்ற பொருள்களை இங்கு கடை அமைத்து, விற்பனை செய்து கொள்ளலாம் என்ற வாய்ப்பை உருவாக்கி உள்ளது. குறிப்பாக தென் தமிழ்நாட்டிற்கு திருச்செந்தூர், ராமேஸ்வரம் போன்ற இடங்களுக்கு கோவையிலிருந்து ரயில்வே சேவையைத் தொடங்க கோரிக்கை வைத்துள்ளோம்.

வடகோவை ரயில் நிலையத்தை இன்னும் சீரமைத்து கோவை மத்திய ரயில் நிலையத்தில் உள்ள கூட்டத்தைக் குறைக்க வடகோவையில் பயணிகள் ஏறி, இறங்கி செல்வதற்கான சூழலை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்துள்ளோம். கோவை ரயில் நிலையத்தை உலகத்தரம் வாய்ந்த ரயில் நிலையமாக மாற்றுவதற்கு ஒரு வாய்ப்பு வந்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆய்வு
நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆய்வு

அதற்கான திட்ட அறிக்கையை தென்னக ரயில்வே தயாரித்து வருகிறது. அதனால் பக்கத்தில் உள்ள நிலங்களை எடுப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகிறார்கள். நமக்கு தேவைப்படக்கூடிய நிலம் கிடைத்தால் உலகத்தரம் வாய்ந்த காந்தி நகர் ரயில் நிலையம் போல, கோவை ரயில் நிலையத்தை மாற்றுவதற்கு ஏற்பாடு செய்யக்கூடிய ஆலோசனை இன்று நடைபெற்றுள்ளது.

நான் இது தொடர்பாக மத்திய அமைச்சரிடம் பேச உள்ளேன். இந்தக்குழுவில் டி.ஆர். பாலு உள்ளார். ஆனால் அவரை இங்கு பார்க்கவில்லை. அவர்கள் புறக்கணிக்கிறார்களா எனத்தெரியவில்லை. இங்கு வந்துள்ள எம்.பி.க்கள் அனைவரும் ஒடிசா, ராஜஸ்தான், குஜராத், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களிலிருந்து வந்துள்ளனர்.

அவங்களுக்குத் தற்போது மொழி பிரச்னை இருந்தது. தமிழ்நாட்டின் எம்.பி இருந்திருந்தால் வசதியாக இருந்திருக்கும். அவர் வராதது ஏமாற்றமாக உள்ளது’ எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: இந்து மதம் குறித்து அவதூறு பரப்பிய திண்டுக்கல் ஐ.லியோனி மீது புகார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.