ETV Bharat / city

வெள்ளத்தால் கழன்று விழுந்த பரம்பிக்குளம் அணை ஷட்டர் - பரம்பிக்குளம்

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் ஒரு ஷட்டர் கழன்று விழந்ததால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க பொதுபணித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

வெள்ளத்தால் கழன்று விழுந்த பரம்பிக்குளம் அணையின் ஷட்டர்

author img

By

Published : Sep 21, 2022, 11:10 AM IST

Updated : Sep 21, 2022, 11:34 AM IST

கோயம்புத்தூர்: பொள்ளாச்சியில் மறைந்த முன்னால் முதலமைச்சர் காமராஜ் கட்டிய அணைகளில் மிகவும் பிரபலமான அணை பரம்பிக்குளம் அணையாகும். மேற்கு தொடர்ச்சி மலைகளில் அதிக மழை பெய்யும் இடமான சோலையார் அணை உபரிநீர் சேடல் டேம் வழியாக சென்று தூணக்கடவு வழியாக பரம்பிக்குளம் அணைக்கு வந்து சேருகிறது.

71 கன அடி கொண்ட பரம்பிக்குளம் அணையில் உபரி நீர் வெளியேற்றம் செய்யும்பொழுது, நீரானது கடலில் கலக்கிறது. இந்நிலையில் நேற்று இரவு 10 மணி அளவில், அணையில் உள்ள மூன்று ஷட்டர்களில் நடுவில் இருந்த ஒரு ஷட்டர் கழன்று விழுந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது.

வெள்ளத்தால் கழன்று விழுந்த பரம்பிக்குளம் அணை ஷட்டர்

பொதுப்பணி துறை ஊழியர்கள் உயர் அலுவலர்களுக்கு தகவல் அளித்ததன் பேரில் பாலக்காடு மாவட்ட ஆட்சியர் முனராய் ஜோஷி மற்றும் தமிழ்நாடு, கேரளா பொது பணித்துறை அலுவலர்கள் தற்பொழுது அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மேலும் அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: குட்டியுடன் வாகனங்களை வழமறித்த காட்டு யானை

Last Updated : Sep 21, 2022, 11:34 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.