கோயம்புத்தூர்: காரமடைப் பகுதியில் சிபிஐ (CBI) அலுவலர்கள் பெட்டதாபுரம் என்னுமிடத்தில், இளைஞர் ஒருவரது வீட்டில் சோதனை நடத்திவருகின்றனர். அவரது மடிக்கணினி, செல்போனை கைப்பற்றியுள்ளனர்.
குழந்தைகளுக்கு எதிரான ஆன்லைன் பாலியல் குற்றங்கள், குழந்தைகளின் ஆபாசப் படங்களைப் புழக்கத்தில் விடுவதைத் தடுக்கும் நடவடிக்கையில், குற்றஞ்சாட்டப்பட்ட 83 நபர்களுக்கு எதிராக 23 புதிய வழக்குகளை சிபிஐ (CBI) பதிவுசெய்துள்ளது. இது தொடர்பாக சிபிஜ 14 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் சோதனை நடத்திவருகிறது.
டெல்லி, ஆந்திரப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், பஞ்சாப், பிகார், ஒடிசா, தமிழ்நாடு, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, குஜராத், ஹரியானா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 77 இடங்களில் சோதனை நடைபெற்றது.
இதையும் படிங்க: ஆன்லைன் ரம்மியால் நேர்ந்த விபரீதம்