ETV Bharat / city

சுஷாந்த் சிங் மரணத்தால் மனமுடைந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை! - வெரைட்டி ஹால்

கோயம்புத்தூர்: பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தால் மனமுடைந்த வட மாநில இளைஞர் ஒருவர், கோவையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கோவை  வடமாநில இளைஞர் கோவையில் தற்கொலை  north indian youth suicide  Coimbatore  வெரைட்டி ஹால்  கோவை செய்திகள்
சுஷாந்த் சிங் மரணத்தால் மணமுடைந்த இளைஞர் கோவையில் தூக்கிட்டு தற்கொலை
author img

By

Published : Jun 24, 2020, 8:47 PM IST

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேரந்த கணபதி தாஸ்(20) என்ற இளைஞர், கோவை வெரைட்டி ஹால் பகுதியிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், இன்று (ஜூன் 24) மதியம் அதே பகுதியிலுள்ள அவரது அறைக்கு உணவருந்தச் சென்றவர் வெகுநேரமாகியும் நிறுவனத்திற்கு திரும்பவில்லை. இதனால், சந்தேகமடைந்த சக ஊழியர்கள் அவரது அறைக்குச் சென்றனர். அங்கு உள்புறமாக பூட்டப்பட்டிருந்த அறையின் கதவை உடைத்துப் பார்க்கையில் தாஸ் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவலர்கள், அவரது உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், அந்த அறையிலிருந்த 'நான் சுஷாந்த் சிங்கிடம் செல்கிறேன்' என அவர் இந்தியில் எழுதி வைத்திருந்த கடிதத்தையும் கைப்பற்றினர்.

இதைத்தொடர்ந்து காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். தற்கொலை செய்துகொண்ட கணபதி தாஸ் செல்போனில் பப்ஜி அடிக்கடி விளையாடுவார் என்றும் கடந்த சில நாள்களாக அவரால் பப்ஜி விளையாட முடியவில்லை என்று புலம்பியதாகவும் அவருடன் பணியாற்றிய தொழிலாளர்கள் காவல்துறையினரிடம் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: கஞ்சா விற்ற இளைஞர் கைது - ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.