ETV Bharat / city

அடுத்த 20 நாள்கள் சவாலானவை - தலைமைச் செயலர் சண்முகம் - Coimbatore news

கோவை: இனிவரும் காலம் பண்டிகை நாட்கள் என்பதால், எதிர்வரும் 20 நாட்கள் சவாலானதாக இருக்கும் என தலைமைச் செயலர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

கோவை
கோவை
author img

By

Published : Nov 8, 2020, 9:35 PM IST

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலர் கே. சண்முகம் கலந்து கொண்டார். அதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கோவையில் அக்டோபர் மாதத்திலிருந்து கரோனா தொற்று அதிகரித்து வந்தது. பல்வேறு கட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டதன் விளைவாக அதன் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. எனவே பாதிக்கப்பட்ட தெருக்களும் வெகுவாகக் குறைந்துள்ளன.

கட்டுப்பாட்டு பகுதிகள் அதிகம் இருந்த நிலையில் தற்போது 33 கட்டுப்பாட்டு பகுதிகள் மட்டுமே கோவையில் உள்ளன. தனிமைப்படுத்துதலை மீறுபவர்களை மருத்துவமனையில் கட்டாயமாக சேர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆய்வில் மாநகர பகுதிகளில் எண்ணிக்கை குறைந்திருந்தாலும் 5 மண்டலங்களிலும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து வருகின்றன.

கோவையில் காரமடை, சூலூர், தொண்டாமுத்தூர் போன்ற பகுதிகள் தொடர்ந்து ஹாட்ஸ்பாட் பகுதிகளாக இருந்து வருகின்றன. நகரத்தை ஒட்டியுள்ள கிராம பகுதிகளிலும் வைரஸ் தொற்று அதிகமாக காணப்படுகிறது. இனிவரும் காலம் பண்டிகை நாட்கள் என்பதால் வருகின்ற 20 நாட்கள் ஒரு சவாலான காலமாக இருக்கிறது. இந்த சவாலான காலத்தில் தளர்வுகள் உள்ள நிலையில் நோய் பரவல் குறைந்தால் ஊரடங்கிலிருந்து தளர்வுகள் மேலும் அறிவிக்கப்படலாம்.

கோவையில் இறப்பு விழுக்காடு 7.5 ஆக உள்ளது. இறப்பு விகிதம் பூஜியம் விழுக்காடாக குறைப்பதே அரசின் இலக்கு. வைரஸ் தொற்றின் தீவிரம் இன்னும் குறையவில்லை என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். எனவே அனைவரும் கட்டாயமாக முகக் கவசம் அணியவேண்டும். அரசு கூறிய அனைத்து கட்டுப்பாட்டு நெறி முறைகளையும் பின்பற்ற வேண்டும்" என்று தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.