கோவை மாவட்டம், சிங்காநல்லூரை அடுத்துள்ள நீலிகோணம்பாளையத்தில் கோபாலசாமி கோயில் எதிரில் மஞ்சள் நிறப் பையிலிருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. அப்போது அவ்வழியாக சென்ற பொதுமக்கள் அந்தப் பையை பிரித்துப் பார்த்தபோது, பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தை தொப்புள்கொடி அகற்றாத நிலையில், துணியால் சுற்றி போடப்பட்டிருந்துள்ளது.
இதனையடுத்து, ஆம்புலன்சுக்கு தகவல் அளிக்கப்பட்டு, அந்த பச்சிளம் குழந்தையை மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த சிங்காநல்லூர் காவல் துறையினர் பிறந்து சில மணி நேரங்களே ஆன குழந்தையை வீசிச் சென்றது யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
![பிறந்த குழந்தையை துணியால் சுற்றி கோயில் அருகே விட்டு சென்ற சம்பவம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-cbe-01-baby-photo-script-tn10027_08062022095808_0806f_1654662488_696.jpg)
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஒமைக்ரான்.. ஸ்ரீபெரும்புதூரில் 2 மாணவர்கள் பாதிப்பு.. மக்களே உஷார்!