கோவை: சவரங்காடு தேயிலைத் தோட்டத்தில் இன்று (31) காலை 2 புலிகள் சென்றதை, அப்பகுதி பொதுமக்கள் எடுத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதைப்போல, வால்பாறை அருகே வெள்ளமலையில் உள்ள தனியார் தோட்டத்திலுள்ள சோலைப்பாடி என்ற இடத்தில் கரடி நடமாட்டத்தையும் அப்பகுதியினர் கண்டு வீடியோ எடுத்துள்ளனர்.
இதனால், அப்பகுதி தொழிலாளர்கள் தங்களின் அன்றாடப்பணியான தேயிலைத் தோட்டப்பணிகளுக்குச் செல்ல முடியாமல் அச்சத்தில் உள்ளனர். எனவே, வனத்துறையினர் அப்பகுதியில் உலாவரும் வன விலங்குகளை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் எனக்கோரிக்கை வைத்துள்ளனர்.
இதன் ஒருபகுதியாக, பகலில் புலிகள் நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறையினர் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: நள்ளிரவில் ஊருக்குள் புகுந்து யானை அட்டகாசம்... பீதியில் மக்கள்