ETV Bharat / city

'திருச்சி, சென்னை ஆகியப்பகுதிகளிலும் என்சிசி ட்ரெய்னிங் அகாடமி..'

author img

By

Published : Aug 1, 2022, 7:44 PM IST

கரோனாவிற்கு பிறகு என்சிசியில் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளதாகவும் விரைவில், திருச்சி, சென்னை ஆகிய பகுதிகளிலும் என்சிசி ட்ரெய்னிங் அகாடமி அமைக்கப்படுமென தமிழ்நாடு தேசிய மாணவர் படை துணை இயக்குநர் அத்துல் குமார் ரஸ்தோகி தெரிவித்துள்ளார்.

என்சிசி
என்சிசி

கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள என்சிசி (National Cadet Corps - NCC) அலுவலகத்தில் தமிழ்நாடு தேசிய மாணவர் படை இணை இயக்குநர் அதுல் குமார் ரஸ்தோகி, மாவட்ட என்சிசி அலுவலர்களுடன் இன்று (ஆக.1) ஆய்வு மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து என்சிசி மாணவர்கள் சிலர் அவர்களை அறிமுகம் செய்து கொண்டனர். அவர்களிடம் என்சிசியை தேர்ந்தெடுத்தன் காரணம் குறித்தும், வருங்கால திட்டம் குறித்தும் கேட்டறிந்தார்.

கோவை என்சிசி அகாடெமி
கோவை என்சிசி அகாடெமி

அதன் பின் செய்தியாளர்களைச்சந்தித்த அவர், 'கோவை மாவட்டத்தில் என்சிசி செயல்பாடுகள் சிறப்பாக உள்ளன. தேசிய அளவில் தூய்மைப்பணிகள் போன்ற சமூக செயல்பாடுகளிலும் முக்கியத்துவம் அளித்து செயல்படுத்தி வருகிறோம். தமிழ்நாட்டில் ஒரு என்சிசி ட்ரெய்னிங் ஏரியா மட்டுமே உள்ள நிலையில் அடுத்த கட்டமாக திருச்சி, சென்னை ஆகிய மாவட்டங்களிலும் உருவாக்குவதற்குத் திட்டமிட்டுள்ளோம்.

கரோனாவிற்குப்பிறகு என்சிசியில் ஆட்கள் அதிகரிப்பு ஆகவில்லை. இதனை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்க மேல் இடத்திற்கு வலியுறுத்தியுள்ளோம். என்சிசி ட்ரெய்னிங் படிப்புகள் சமுதாயத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும் ஒன்று' எனத் தெரிவித்தார்.

தேசிய மாணவர் படை துணை இயக்குநர்(தமிழ்நாடு) அத்துல் குமார் ரஸ்தோகி பேட்டி
இதையும் படிங்க: காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.