கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுது.
அப்போது அமைச்சர் பேசுகையில், கரோனா சிகிச்சை மையங்களில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும், குழந்தைகள், பெரியவர்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம், வைரஸ் தொற்று குறித்து தகவல் பரப்புவோர மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் மூலம் 19 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு தலா ஒரு லட்சத்து 50 ஆயிரம் வீதம் மொத்தம் 1,595 பயனாளிகளுக்கு கரோனா நிவாரண நிதியாக 28 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. பின்னர், புலம்பெயர்ந்து மீண்டும் சொந்த ஊர் திரும்பிய இளைஞர்கள் புதிதாக தொழில்கள் தொடங்க கிராமப்புற வறுமை ஒழிப்பு சங்கங்கள் மூலம் தலா ஒரு லட்சம் என 21 பயனாளிகளுக்கு 21 லட்சம் நிதியை அமைச்சர் வேலுமணி வழங்கினார்.