ETV Bharat / city

கோவையில் அறுவை கூலி உயர்வு - இறைச்சி வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்! - கோவையில் மாடு அறுவைக்கு ரூபாய் 250 ஆக உயர்வு

கோவை மாநகராட்சியில் 10 ரூபாய் கட்டணமாக இருந்த மாடு அறுவை கட்டணத்தை 250 ரூபாயாக உயர்த்தியதைக் கண்டித்து மாட்டிறைச்சி வியாபாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 4, 2022, 7:43 PM IST

கோவை மாநகராட்சி கூட்டத்தில், 5 ரூபாயாக இருந்த ஆடு அறுவைக்கு 100 ரூபாயும், 10 ரூபாயாக இருந்த மாடு அறுவை கூலி, 250 ரூபாய் என கட்டணம் நிர்ணயம் செய்து, மாநகராட்சிக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக இறைச்சி வியாபாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த கட்டண உயர்வைக்கண்டித்து கோவை மாநகர் மாவட்ட மாட்டிறைச்சி வியாபாரிகள் சங்கத்தினர் கோவை ஆத்துப்பாலம் பகுதியில் இன்று (ஆக.4) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள், அறுவை கட்டணத்தை குறைக்க வலியுறுத்தினர்.

பல ஆண்டுகளாக அறுவைக்கட்டணமாக 10 ரூபாய் மட்டுமே இருந்த நிலையில், தற்போது மாநகராட்சி, 250 ரூபாய் உயர்த்தியுள்ளதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும்; அத்துடன், மாட்டிறைச்சியின் விலையும் உயரக்கூடும் எனவும்கூறி மாட்டிறைச்சி வியாபாரிகள் சங்கத்தலைவர் நிம்மதி இஸ்மாயில் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உயர்த்திய கட்டணத்தைக் குறைக்காவிட்டால் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் மாட்டிறைச்சி வியாபாரிகள் தெரிவித்தனர். இதில் சுமார் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோவை மாநகராட்சியை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

கோவையில் இறைச்சி வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

இதையும் படிங்க: கோயில் சுற்றுச்சுவர் இடிப்பு - பாஜக எதிர்ப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.