சட்டப்பேரவை தேர்தலில் கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில், சுயேட்சையாக போட்டியிடுகிறார் நடிகர் மன்சூர் அலிகான். நாம் தமிழர் கட்சியிலிருந்து அண்மையில் விலகிய இவர், தொண்டாமுத்தூர் தொகுதி முழுவதும் சுற்றி சுழன்று வாக்கு சேகரித்து வருகிறார். இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர், “நான் தமிழ் தேசிய புலிகள் கட்சியின் சார்பாக சுயேட்சையாக நிற்கிறேன். நான் பிறந்தது கொங்கு மண்டலம் என்பதால் இங்கு நான் போட்டியிடுகிறேன்.
இது திப்பு சுல்தானின் புலி, சிங்களப் பேரினவாதத்தால் அடிபட்ட புலி, இந்திய தேசிய விலங்கான புலி. இது ராவண தேசம், பெரியாரின் தேசம். அடிபட்ட வேங்கையாக கொங்கு மக்களின் மனதில் இடம் பெறுவேன்” என்றார்.
அதனைத் தொடர்ந்து, ’ரகுபதி ராகவ ராஜா ராம்’ பாடலை பாடிய மன்சூர் அலிகான், மத ஒற்றுமையை வலியுறுத்தும் இந்தப் பாடலில் வருவது போல், இங்கு மதநல்லிணக்கம் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், இந்து கிறிஸ்துவ இஸ்லாமியர் அனைவரும் ஒற்றுமையாக ஒன்றுபட்டு இருக்க தமிழ் தேசிய புலிகள் பாடுபடும் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: என் வெற்றி மீது நம்பிக்கை உள்ளது - நடிகை குஷ்பு