கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்றுவருகிறது. தொகுதி 34 சுற்றுகளாகவும், கோவை வடக்குத் தொகுதி 36 சுற்றுகளாகவும், தொண்டாமுத்தூர் தொகுதி 34 சுற்றுகளாகவும், கோவை தெற்கு தொகுதி 26 சுற்றுகளாகவும், சிங்காநல்லூர் தொகுதி 33 சுற்றுகளாகவும், கிணத்துக்கடவு தொகுதி 35 சுற்றுகளாகவும், பொள்ளாச்சி தொகுதி 23 சுற்றுகளாகவும், வால்பாறை தொகுதி 21 சுற்றுகளாகவும் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
தற்போதைய நிலவரப்படி கோவை தெற்குத் தொகுதியில் மநீம தலைவர் கமல் ஹாசனும் சிங்காநல்லூர் தொகுதியில் திமுக வேட்பாளர் நா. கார்த்திக்கும் தொண்டாமுத்தூர் தொகுதியில் அமைச்சர் எஸ்பி வேலுமணியும் முன்னிலையில் உள்ளனர்.
தமிழ் தேசிய புலிகள் கட்சித் தலைவரும் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளருமான நடிகர் மன்சூர் அலிகான் வெறும் நாற்பத்தொரு வாக்குகள் மட்டுமே பெற்று பெரும் பின்னடைவில் உள்ளார். தேர்தல் பரப்புரையின்போது பல்வேறு யுக்திகளைப் பயன்படுத்தி இவர் மக்களை வெகுவாகக் கவர்ந்தார். முன்னதாக சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகியது இவர் சமீபத்தில்தான் தமிழ் தேசிய புலிகள் கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிட்டார்.