கோயம்புத்தூர் மாவட்ட தெற்கு தொகுதிக்கான சிறப்பு குறை தீர்க்கும் முகாமில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா புலியகுளத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மக்களுக்கு உபயோகப்படும் பொருட்களான இருசக்கர வாகனங்கள், மடிக்கணினி, தையல் இயந்திரங்கள் ஆகியவற்றை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வழங்கினார். மேலும் அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்து அவர்கள் அளித்த மனுக்களையும் அமைச்சர் பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், கோயம்புத்தூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட பணிகள் நடைபெற்று வருவதற்கு முதலமைச்சரின் நடவடிக்கைதான் காரணம் என்றும், தற்போது நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நிறைவடைந்தால் கோயம்புத்தூர் மாநகரம் வெளிநாடு போல மாறிவிடும் என்றும் தெரிவித்தார்.
இதையும் படியுங்க: கோவையில் ஏர்மேன் பணிக்கான ஆட்கள் தேர்வு முகாம்!