கோவை: Kodanad case: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு பங்களாவில் 2017ஆம் ஆண்டு கொள்ளை சம்பவம் நடைபெற்றது. அப்போது இரவு காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை, கொள்ளை வழக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
முன்னதாக, வழக்கு விசாரணையை மூன்று மாதங்களுக்குள் முடிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனிடையே கரோனா ஊரடங்கிற்கு பின் வழக்கு விசாரணை தொடங்கியபோதும் வழக்கில் தொடர்புடைய திபு விசாரணைக்கு தொடர்ந்து வராமல் தலைமறைவாக இருந்து வந்தார்.
தலைமறைவாக இருந்த, திபுவிற்கு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்து ஐந்து தனிப்படை காவல் துறையினர் தேடிவந்த நிலையில், அவர் (செப். 23) உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இந்நிலையில், கோவை காவலர் பயிற்சி மைதானத்தில் மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையில் (ஜனவரி 6) திபுவிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இதையும் படிங்க: தொடங்கியது இரவு நேர ஊரடங்கு: காவல் துறை பாதுகாப்புப் பணிகள் தீவிரம்