ETV Bharat / city

ஜெனீவா ஐநா தலைமையகத்தில் ஜக்கி வாசுதேவ்! - ஜெனிவா ஐநா தலைமையகத்தில் ஜக்கி வாசுதேவ்

மண் அழிவை தடுத்து, அதன் வளத்தை மீட்டெடுக்க உலகெங்கும் உள்ள மக்கள் இப்போதே குரல் கொடுக்க வேண்டும் என சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் ஈஷா நிறுவனர் ஜக்கி வாசுதேவ் பேசியுள்ளார்.

ஜெனிவா ஐநா தலைமையகத்தில் ஜக்கி வாசுதேவ்!

author img

By

Published : Apr 8, 2022, 7:37 AM IST

அழிந்து வரும் மண் வளத்தை மீட்டெடுப்பதற்காக ‘மண் காப்போம்’ என்ற உலகாளவிய சுற்றுச்சூழல் இயக்கத்தை ஈஷா நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தொடங்கியுள்ளார். இதுகுறித்து, உலகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 100 நாள் மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள அவர், 16ஆவது நாளில் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரைச் சென்றடைந்தார்.

இந்நிலையில், 'மண் காப்போம்' இயக்கத்திற்கு ஆதரவாக, ஐ.நாவிற்கான இந்திய நிரந்தர திட்ட அமைப்பு (Permanent Mission of India) சார்பில் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று ஜெனீவாவில் ஏப்ரல் 5ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டது. சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இந்நிகழ்ச்சியில் சத்குரு ஜக்கி வாசுதேவ் பங்கேற்றார். அங்கு அவர் பேசியதாவது, "நம்முடைய வாழ்விற்கும் நம்மைச் சுற்றியுள்ள மற்ற உயிரினங்களின் வாழ்விற்கும் மண் தான் அடித்தளமாக உள்ளது.

மண் வளமாக இருந்தால் தான் நாம் நலமாக இருக்க முடியும். உலகின் பல நாடுகளில் மண் தனது வளத்தை வேகமாக இழந்து, அழிவை நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறது. இந்தப் பிரச்சினை இப்படியே தீர்வு காணப்படாமல் சென்றால், உலக அளவில் மிகப் பெரிய உணவு தட்டுப்பாடு ஏற்படும் என ஐ.நா எச்சரித்துள்ளது.

மேலும், மண் முற்றிலுமாக வளம் இழந்து தண்ணீர் தட்டுப்பாடு அதிகரிக்கும். பருவநிலை மாற்றத்தின் தாக்கம் அதிகரிக்கும், உள்நாட்டுக் கலவரங்கள் உருவாகும், மக்கள் பெருமளவில் இடம்பெயர வேண்டிய அவலநிலையும் உருவாகும் எனக் கூறியுள்ளது.

மண்ணை காக்க சட்டம்: எனவே, மண் வளத்தைப் பாதுகாப்பதற்குத் தேவையான சட்டங்கள் இப்போதே இயற்றப்பட வேண்டும். மண் அழிவைத் தடுப்பதற்கும், அதன் வளத்தை மீட்டு எடுப்பதற்கும் உரிய நடவடிக்கைகளில் அரசாங்கங்கள் ஈடுபட வேண்டும். அதற்கு மக்கள் குரல் கொடுக்க வேண்டியது மிகவும் அவசியம்.

ஜனநாயக நாடுகளில் இரண்டு விஷயங்களுக்கு மிக அதிகமான சக்தி இருக்கிறது. ஒன்று, உங்களுடைய ஓட்டு, மற்றொன்று உங்களுடைய குரல். மண் வளத்தைப் பாதுகாப்பது குறித்து இதுவரை நீங்கள் என்ன பேசியுள்ளீர்கள்? உங்களுடைய குரல் எங்கே போனது? நீங்கள் குரல் கொடுக்க வேண்டிய நேரம் இது.

நீங்கள் சத்தமாகக் குரல் எழுப்பாவிட்டால், நீண்ட காலம் செயல் செய்து தீர்வு காண வேண்டிய இதுபோன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காண எந்த அரசாங்கமும் ஆர்வம் காட்டாது. நீங்கள் எனக்கு ஆதரவு அளிக்க வேண்டாம். ஆனால், மண் குறித்து ஏதாவது ஒரு விஷயத்தைத் தினமும் பேசுங்கள்" என்று கூறினார்.

இதையும் படிங்க:100 நாளில் 27 நாடுகள் - ஜக்கி வாசுதேவின் மோட்டார் சைக்கிள் பயணத் திட்டம்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.