ETV Bharat / city

'விஜய் வரிகட்டாமல் ஏமாற்றுகிறார், சூர்யா இரட்டை வேடம் போடுகிறார்'- கொதிக்கும் அர்ஜுன் சம்பத்!

author img

By

Published : Nov 18, 2021, 5:39 PM IST

ஜெய் பீம் திரைப்படத்தை ஒடிடி தளத்தில் வெளியிட்டுவிட்டு நடிகர் சூர்யா ரூ.70 கோடி சம்பாதித்துவிட்டு, பார்வதிக்கு ரூ.10 லட்சம் அளித்துள்ளார். சினிமா நடிகர்கள் தேசியத்தை இழிவுப்படுத்தி பேச வேண்டிய அவசியம் இல்லை. விஜய் சேதுபதி தேவர் திருமகனாரை அவமதித்துள்ளார். விஜய் வரிகட்டாமல் ஏமாற்றுகிறார், சூர்யா இரட்டை வேடம் போடுகிறார் என அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

நடிகர் மீதான குற்றச்சாட்டை முன்வைக்கும் அர்ஜுன் சம்பத்

கோயம்புத்தூர்: சுதந்திரப் போராட்ட வீரர் செக்கிழுத்த செம்மல் வ.உ.சி-யின் நினைவு தினத்தையொட்டி கோயம்புத்தூர் மத்திய சிறையிலுள்ள அவரது சிலைக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

வ.உ.சி சிலைக்கு மரியாதை செலுத்திய அர்ஜுன் சம்பத்

பின்னர், ஈடிவி பாரத்திற்கு பேட்டியளித்த அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், “நடிகர் விஜய் சேதுபதியை உதைப்பவர்களுக்கு 1001 ரூபாய் பரிசாக வழங்கப்படும் என இந்து மக்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவு வெளியிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக கோயம்புத்தூர் காவல் துறையினர் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இது காழ்ப்புணர்ச்சி காரணமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முத்துராமலிங்கத் தேவரை விமர்சித்ததற்கு எதிர்வினையாக அத்தகைய பதிவு எங்கள் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டது. வழக்கை சந்திப்பதில் எங்களுக்குப் பிரச்சினையில்லை.

வரி கட்டாமல் ஏமாற்றிய விஜய்

விஜய் சேதுபதி போன்றோர் ஒன்றிய அரசு வழங்கும் விருதுகளை பெற்றுக் கொண்டு இந்தியா குறித்தும், சுதந்திர போராட்ட தியாகிகள் குறித்தும் தவறாக பேசி வருகின்றனர்.

இவர்கள் அர்பன் நக்சால் கைப்பாவையாக மாறுகின்றனர். எங்களுடைய கருத்து சுதந்திரத்தை அளவாக வைத்துக் கொள்ள வேண்டும் இது கண்டிக்கத்தக்கது. நடிகர் விஜய் தனது படத்தில் 5 ரூபாய்க்கு மருத்துவம் பார்ப்பேன் என வசனம் பேசிவிட்டு, வரி கட்டாமல் ஏமாற்றுகிறார்.

நடிகர்கள் மீதான குற்றச்சாட்டை முன்வைக்கும் அர்ஜுன் சம்பத்

அதுபோல் நடிகர் சூர்யா ஜெய்பீம் படத்தை ஒடிடியில் வெளியிட்டு 70 கோடி ரூபாய் சம்பாதித்துவிட்டு, ராஜாக்கண்ணுவின் மனைவிக்கு வெறும் 10 லட்சம் ரூபாய் மட்டுமே கொடுத்துவிட்டு தொழிலாளர் நலன் மனித உரிமை குறித்துப் பேசி இரட்டை வேடம் போடுகிறார்” எனக் குற்றஞ்சாட்டினார்.

மேலும், இல்லாத இருள் அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி கொடுத்துவிட்டு சூர்யா முதலமைச்சருடன் நின்று விளம்பரம் தேடுகிறார்” என்றும் அர்ஜுன் சம்பத் விமர்சித்தார்.

இதையும் படிங்க: சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் கோவி. மணிசேகரன் மறைந்தார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.