இதனையடுத்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,’ நீலகிரியில் கடும் மழை பொழிந்துள்ளதால் பேரிடர் மேலாண்மை துறை உயர் அலுவலர்கள் முகாமிட்டு நிவாரண பணிகளை செய்துவருகின்றனர். ஆனால் கோவையில் மழை வருவதற்கு முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
![S.P VELUMANI FLOOD NOIYAL RIVER BRIDEGE DAMGE எஸ்.பி.வேலுமணி நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4097833_kovai-4-4.jpg)
இருப்பினும், கோவையில் 275.47 மி.மீ மழை கோவையில் பெய்துள்ளதால் சிறிதளவில் மட்டுமே பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நொய்யல் ஆற்றில் அதிக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே வாய்க்கால்கள், குளங்கள் தூர்வாரப்பட்டு இருந்ததால் குளங்களில் அதிகமான தண்ணீர் நிரம்பிவருகிறது.
![S.P VELUMANI FLOOD NOIYAL RIVER BRIDEGE DAMGE எஸ்.பி.வேலுமணி நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4097833_kovai-4-3.jpg)
இதனைத் தொடர்ந்து , நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் கன மழையால் பில்லூர் அணையின் நீர் மட்டம் 97.5 அடியாகவும், சிறுவாணி அணையின் நீர் மட்டம் 43 அடியாகவும் உயர்ந்து இருக்கின்றது.வெள்ள பாதிப்பு காரணமாக நடமாடும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது.
தாங்கள் இருக்கும் இடத்தில் பாதுகாப்பு இல்லை என பொதுமக்கள் கருதினால் உடனடியாக நிவாரண முகாம்களுக்கு வந்துவிட வேண்டும். இதுவரை மழை வெள்ளத்தில் 21 குளங்களில் தண்ணீர் நிரம்பி உள்ளதால், 72 வீடுகள் பாதியும், 27 வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன.
அதேசமயம், வெள்ளத்தில் பாதித்த 397 குடும்பங்களைச் சேர்ந்த 1335 பேர் 17 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் ராவத்தூரில் சேதமடைந்துள்ள நொய்யல் ஆற்றுப் பாலத்தை உயர்மட்ட பாலமாக மாற்றி அமைக்கப்படுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்படும். சிங்காநல்லூர்-வெள்ளலூர் இடையிலான பாலம் குறித்து அலுவலர்களுடன் ஆய்வு செய்தபின் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.