கோயம்புத்தூர்: திமுக கிராம சபை கூட்டம் நடத்துவது அரசியல் உள்நோக்கமாகும். அதேசமயம் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை என அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.
இந்து மக்கள் கட்சி சார்பில் பொள்ளாச்சி தனியார் கல்யாண மண்டபத்தில் கந்த சஷ்டி கவசம் பாராயணம், சுப்பிரமணி சாமி கோயிலில் வேல் வழிபாடு நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டேன் என்று சொன்னது அவர் உடல்நிலை கருதி கூறியுள்ளார். இதை அவரது ரசிகர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
வரும் தேர்தலில் இந்து மக்கள் கட்சி 234 தொகுதிகளில் போட்டியிடும், ரஜினிகாந்த் ஆசியுடன் இந்து மக்கள் கட்சி மக்களிடம் ஆன்மீக அரசியலை எடுத்துச் செல்லும். மேலும், திமுக கிராம சபை கூட்டம் நடத்துவது அரசியல் உள்நோக்கமாகும், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை என தெரிவித்தார்.
இதையும் படிங்க: ரஜினியை வைத்து அரசியல் லாபம் அடைய நினைத்த பாஜகவுக்கு தோல்வி - இயக்குநர் வ.கெளதமன்