கோயம்புத்தூர்: கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த, பாஸ்கரன்-ஐஸ்வர்யா தம்பதிக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு ஆண், பெண் என இரட்டை குழந்தை பிறந்தது. இந்த குழந்தைகளை கவனித்துக்கொள்ள ஐஸ்வர்யாவின் தாயார் சாந்தி மதுரையில் இருந்து அழைத்து வரப்பட்டார். இரண்டு மாதங்களாக சாந்தி குழந்தைகளை கவனித்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று(அக்.21) ஐஸ்வர்யா கடைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய போது, ஆண் குழந்தை பிறப்புறுப்பு அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டும், பெண் குழந்தை துணியால் சுற்றியபடி கழிவறையில் கிடந்தும் உள்ளது. இதையடுத்து, பாட்டி சாந்தி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். தகவலறிந்த துடியலூர் காவல்துறையினர் பெண் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காகவும், ஆண் குழந்தையின் உடலை உடற்கூராய்விற்கும் அனுப்பி வைத்தனர்.
முதல் கட்ட விசாரணையில், சம்பவ நாளன்று பாட்டி சாந்தி, ஆண் குழந்தையை கொலை செய்துவிட்டு, பெண் குழந்தையையும் கொலை செய்ய முயற்சித்துள்ளார். மகள் ஜஸ்வர்யா வந்ததும், அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார் என்பது தெரியவந்தது. மூதாட்டி சாந்தி பல ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கணவர் மீதுள்ள கோபத்தால் குழந்தையைக் கொன்ற தாய்