கோயம்புத்தூர்: கோவை மாவட்டம் போலுவாம்பட்டி காப்பு காட்டிற்குள் நேற்றிரவு காட்டுப்பன்றியை வேடையாடி விட்டு தப்ப முயன்ற நான்கு பேர் வனச்சரக பணியாளர்களிடம் பிடிப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், வேட்டையில் ஈடுபட்டவர்கள் ராஜ்குமார் (எ) அசோக்குமார், சசிக்குமார், சம்பத்குமார், தேவராஜ் என்பதும், நால்வரும் கோவையில் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த நண்பர்கள் என்பதும் தெரிய வந்தது.
அவர்களிடமிருந்து ஒரு காரும், நாட்டு துப்பாக்கியும் (Country made Gun) கைப்பற்றப்பட்டன. அதனைத் தொடர்ந்து நால்வரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
அசோக்குமார் 2004ஆம் ஆண்டு சிறுமுகை வனச்சரகத்தில் வனவிலங்குகளை வேட்டையாடியதற்காக ரூ.1 லட்சம் அபராதம் விதித்திக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2013ஆம் ஆண்டு மானை கொன்றதற்காக அவரது துப்பாக்கியின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பின்னர் நாட்டு துப்பாக்கித் தயாரித்து, அதன் மூலம் வேட்டையாட்டி வந்துள்ளார். இந்நிலையில், அசோக் குமார் 2018ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து 2 இருசக்கர வாகனங்கள், ஒரு நாட்டு துப்பாக்கி கைப்பற்றப்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில் மீண்டும் அவர் நாட்டு துப்பாக்கித் தயாரித்து வேட்டையாடிய நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.