கோவை: 7 வனச்சரகங்களை உள்ளடக்கிய கோவை வனக்கோட்டத்தில், ஊழியர்களின் பணிச் சுமையை குறைக்கும் வகையில் 146 வேட்டைத்தடுப்பு காவலர்களும், 10 அதிவிரைவுப்படை காவலர்களும் ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். வேட்டைத் தடுப்பு காவலர்களுக்கு 12 ஆயிரத்து 500 ரூபாயும், அதிவிரைவுப்படை காவலர்களுக்கு 12 ஆயிரத்து 900 ரூபாயும் மாத ஊதியமாக அரசின் வங்கி கணக்கில் இருந்து நேரடியாக வழங்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக வனத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் அதிவிரைவுப்படை (RRT) ஊழியர்களுக்கு தன்னார்வ அமைப்புகள் மூலம் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. 10 ஆண்டுகளுக்கும் மேல் வேட்டைத்தடுப்பு காவலர்களாக பணியாற்றினால் பணி நிரந்தரம் செய்யப்பட்டு சிறப்பு வனக்காவலர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
கனவாக மாறிய பணி நிரந்தரம்
இந்த நிலையில், தன்னார்வ அமைப்புகள் மூலம் ஊதியம் வழங்குவது என்பது தங்களது பணிப்பதிவுகளை துண்டிக்கும் விதமாக உள்ளது என வனத்துறை ஒப்பந்த ஊழியர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். பத்தாண்டுகளுக்கு மேல் ஒப்பந்தப்பணியாளராக பணியாற்றி வரும் வேட்டைத் தடுப்பு காவலர்கள் பணி நிரந்தரம் செய்யப்படும் சூழலில் இத்தகைய சூழலில் தன்னார்வலர்கள் மூலம் ஊதியம் வழங்கப்பட்டால் தங்களுக்குப்பணி நிரந்தரம் என்பது கனவாகவே போய்விடும் என்பதால் மீண்டும் அரசே தங்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: 'இனி டாக்டர்.மு.க.ஸ்டாலின்...!' கௌரவ டாக்டர் பட்டம் பெற நாளை துபாய் செல்லும் முதலமைச்சர்!