கோயம்புத்தூர்: வேட்டைக்காரன்புதூரில் சில நாள்களுக்கு முன்பு ஹரிஹரன் என்னும் பட்டியலின இளைஞரை சிலர் கடுமையாக தாக்கினர்.
இதையடுத்து அப்பகுதியினர் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஜனவரி 10ஆம் தேதி பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், பொள்ளாச்சி துணை கண்காணிப்பாளர்கள் செல்வி தமிழ்மணி, சீனிவாசன் ஆகியோர் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.
பட்டியலின இளைஞரை தாக்கியதாகக் கூறப்படும் கேசவன், காளிமுத்து ராசாத்தி, ராம், அசாமைச் சேர்ந்த உமர் அலி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த ஆனைமலை காவல் துறையினர், பொள்ளாச்சி நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: திருச்சியில் அனுமதியின்றி சேவல் சண்டை: ஐந்து பேர் கைது