மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் பகுதியில் அமைந்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தில் புலி, சிறுத்தை, மான், வரையாடு உள்ளிட்ட அரியவகை வன விலங்குகள் வசித்துவருகின்றன. இங்குள்ள வனவிலங்குகளை ஆண்டுதோறும் கணக்கெடுக்கும் பணி நடைபெறும்.
அதையொட்டி ஆனைமலை புலிகள் காப்பக கூடுதல் வனப் பாதுகாவலர், துணை கள இயக்குநர் ஆரோக்கியராஜ் சேவியர் உத்தரவின்பேரில் வன உதவி பாதுகாவலர் செல்வம் கூறுகையில், 32 காவல் பகுதிகளில், 62 நேர்கோட்டுப் பாதைகளில் மழைக்கால பிந்தைய வன விலங்குகள் கணக்கெடுக்கும் முதல்நாள் பயிற்சி அட்டகட்டியில் தொடங்கியது எனத் தெரிவித்தார்.
இதில் புலி பீட்டர், பிரேம், சக்ரவர்த்தி, கார்த்திக் ஆகியோர் கணக்கெடுப்பது குறித்து பயிற்சி அளித்தனர். இதில் பொள்ளாச்சி, வால்பாறை, மானாம்பள்ளி, உலாந்தி ஆகிய நான்கு வனச்சரகர்கள், வனவர்கள், வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள், வேட்டைத் தடுப்புக் காவலர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: காஷ்மீரில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை; ஒருவர் கைது