கோயம்புத்தூர்: சத்தியமங்கலம் சாலையிலுள்ள செல்லப்பப்பாளையம் கிராமத்தில் சாலையில் நடந்துசென்ற முதியவர் மீது அரசுப் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. இதில், முதியவர் படுகாயமடைந்தார். அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
அங்கு அவருக்குச் சிகிச்சையளிக்கப்பட்டுவந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்னர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இதனையடுத்து அவரின் விவரம் அறிய அன்னூர் காவல் துறையினர் முதியவரின் புகைப்படத்தை வெளியிட்டு அவரை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டனர்.
எனினும் அவரைப் பற்றி எந்தவொரு தகவல்களும் கிடைக்காததால் நேற்று (செப். 9) அவரின் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டு காவல் துறை சார்பில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனை அன்னூர் காவல் நிலைய பெண் தலைமைக் காவலர் பொன்மணி முன்நின்று நல்லடக்கம்செய்தார்.
இதையும் படிங்க: காவலருக்குப் 'பளார்' - கத்தியைக் காட்டி மிரட்டிய லாரி ஓட்டுநர் கைது