ETV Bharat / city

இளம் யானைகள் உயிரிழப்பு: ரகசிய ஆய்வில் இறங்கிய குழு

இளம் யானைகள் உயிரிழப்பு குறித்து வனத்துறை உயர் அலுவலர்கள் கோயம்புத்தூரில் ஆய்வு மேற்கொண்டனர். அலுவலர்கள் ஆய்வை மறைக்கும் வனத்துறையினர், யானை உயிரிழப்பிற்கான உண்மையான காரணத்தை தெரிவிப்பார்களா? என்ற சந்தேகம் சூழலியல் ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது.

உண்மையான காரணம் என்ன?
உண்மையான காரணம் என்ன?
author img

By

Published : Apr 5, 2022, 4:02 PM IST

கோயம்புத்தூர்: கோவை வனக்கோட்டத்தில் மட்டும் கடந்த மூன்று மாதங்களில் 11 யானைகள் உயிரிழந்துள்ளன. இதில், இளம் யானைகள் உயிரிழப்பும் அடங்கும். இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் கடந்த ஓராண்டில் நிகழ்ந்த யானைகள் உயிரிழப்புகளை ஆய்வு செய்து அறிக்கை தரக்குழு அமைத்து தமிழ்நாடு வனத்துறை மார்ச் 31ஆம் தேதி உத்தரவிட்டது.

அந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அன்வருதீன், அலுவலர்கள் பத்மா, சமர்த்தா, கோயம்புத்தூரைச் சேர்ந்த ஓசை அமைப்பின் தலைவர் காளிதாசன் ஆகியோர் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர். இந்தக்குழுவினர் களத்தில் நேரடியாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும், யானைகள் உயிரிழப்புக்கான காரணிகளை தரவுகளுடன் அறியவேண்டும் எனவும், வருங்காலத்தில் இயற்கைக்கு மாறாக ஏற்படும் யானைகள் மரணங்களைத் தடுக்கும் வழிமுறைகளை வகுத்து, அறிக்கை சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டிருந்தது.

உண்மையான காரணம் என்ன?

இந்நிலையில், கோயம்புத்தூர் போளுவாம்பட்டி வனச்சரகத்தில் அண்மையில் அவுட்டுக்காய் கடித்ததால் வாய்சிதறி இளம் யானை உயிரிழந்த இடத்தை அன்வருதீன் தலைமையிலான குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அவுட்டுக்காய் எப்படி வனப்பகுதிக்குள் வருகிறது? அதை யார் தயாரிக்கிறார்கள்? என்பது குறித்து கேட்டறிந்தனர்.

இதனிடையே அலுவலர்கள் ஆய்வை சூழலியல் ஆர்வலர்களுக்கோ, செய்தியாளர்களுக்கோ தெரிவிக்காமல் கோயம்புத்தூர் வனக்கோட்டத்தில் உள்ள அலுவலர்கள் ரகசியமாக வைத்திருந்தனர்.

இதையும் படிங்க: 'தண்ணீர் தேடி வந்த ஆண் யானை கிணற்றில் விழுந்து உயிரிழந்த சோகம்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.