கோவை, சிங்காநல்லூர் கோத்தாரி நகரில் குடும்பத்துடன் வசித்து வருபவர் மாரியப்பன் (57). இவர் ஒண்டிபுதூர் மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
ஏப்ரல் 23ஆம் தேதியன்று குடும்பத்துடன் அவரது சொந்த ஊரான நெல்லைக்கு சென்றுவிட்டு, இன்று (ஏப். 26) வீடு திரும்பியுள்ளார்.
அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்துளளார். பீரோவில் இருந்த 40 பவுன் தங்க நகை, 1.5 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை போனது தெரியவந்தது.

இதுதொடர்பாக சிங்காநல்லூர் காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.