நாளை (ஏப்ரல் 6) தமிழ்நாட்டில் நடைபெற இருக்கின்ற சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் கோவை மாநகர காவல் துறை சார்பில் இன்று கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.
பொதுமக்கள் அனைவரும் அச்சமின்றி வாக்களிக்க இவ்வித அணிவகுப்பானது கோவையில் மூன்று இடங்களில் நடைபெற்றது. இதில் துப்பாக்கி ஏந்தியபடி காவல் துறையினர் பங்கேற்றனர்.
இந்தக் கொடி அணிவகுப்பு கோவை மாநகர் மேற்கு காவல் உட்கோட்டம் மரக்கடை, மத்திய காவல் கோட்டத்தில் நடைபெற்றது. இதில் சுமார் 300-க்கும் மேற்பட்ட காவலர்கள் பங்கேற்றனர்.
அதேபோன்று கோவை பந்தய சாலைப் பகுதிகளிலும் அனைவரும் 100 விழுக்காடு வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 10 வயதுக்குள்பட்ட குழந்தைகள் முதல் மாணவர்கள் வரை வாக்கை விற்கக் கூடாது என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொண்டனர்.