கோயம்புத்தூர்: அண்ணா நகரை சேர்ந்த அதிமுக பிரமுகர் கே.வி.என்.ஜெயராமன் 2001 முதல் 2016ஆம் ஆண்டு வரை வீரபாண்டி பேரூராட்சி தலைவராக இருந்தார். இந்த பதவி காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார்கள் எழுந்தன. இந்த புகாரின் அடிப்படையில், நேற்று(ஜன.24) லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்கள் அவரது வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர்.
இதனையறிந்த அதிமுகவினர் அவரது வீட்டின் முன் குவிந்து சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர்.. இதனிடையே முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சம்பவ இடத்திற்கு விரைந்து சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்தார். சோதனை முடிவில் எவ்வித ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை.
இதுகுறித்து எஸ்.பி. வேலுமணி கூறுகையில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே திமுக இதுபோன்ற சோதனைகளை செய்ய அலுவலர்களை தூண்டுகிறது என்றார். ஜெயராமன் பதவிக் காலத்தில் வருமானத்தைவிட அதிகமாக ரூ.1 கோடியே 45 லட்சத்துக்கு சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது.
இதையும் படிங்க: நெல்லையில் 3 மாணவர்கள் உயிரிழந்த விவகாரம் - காவல்துறை பதிலளிக்க உத்தரவு