கோவை விளாங்குறிச்சி தண்ணீர் பந்தல் சாலையில், புதிய தார்சாலை அமைக்கும் பணியை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இன்று (பிப்.06) தொடங்கி வைத்தார். இந்த அரசு விழாவிற்கு சிங்காநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினரான நா.கார்த்திக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்து அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வரக்கூடிய ஐடி பார்க் அருகே 100க்கும் மேற்பட்ட திமுகவினர், அமைச்சருக்கு கருப்பு கொடி காட்ட முயன்றனர்.
உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணியை கண்டித்து, திமுகவினர் கருப்பு கொடியை கையில் ஏந்தியவாறு, அவருக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியனர். அமைச்சருக்கு எதிராக கருப்பு கொடி காட்ட முயன்ற 100க்கும் மேற்பட்ட திமுகவினரை பீளமேடு காவல் துறையினர் குண்டு கட்டாக தூக்கி வாகனத்தில் ஏற்றி கைது செய்தனர். இதனால், அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இதே போல அவினாசி சாலை, ஹோப்ஸ் பகுதியிலும் கருப்பு கொடி காட்ட முயன்ற திமுகவினரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.
இதையும் படிங்க: ரமலான் திருநாளில் சிபிஎஸ்இ தேர்வுகளா? - தேதியை மாற்றக்கோரி சு. வெங்கடேசன் எம்பி கடிதம்