கோயம்புத்தூர்: கோவையிலிருந்து மதுரை செல்வதற்கு பழனி சென்று பிறகு அங்கிருந்து இணைப்பு ரயிலில் மதுரை செல்ல வேண்டிய சூழல் இருந்தது.
இந்நிலையில், இன்று கோவையிலிருந்து மதுரைக்கு நேரடியாக செல்லக்கூடிய இரயில் சேவை துவங்கப்பட்டுள்ளது. இந்த புதிய சேவையை பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் பச்சை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
மதுரையில் இருந்து காலை 7.25 கிளம்பும் இந்த ரயில் மதியம் 12.45 மணிக்கு கோவை ரயில் நிலையம் வந்தடைகிறது. பின் மீண்டும் மதியம் 2.05 மணிக்கு கிளம்பும் ரயில் இரவு 7.35 மணிக்கு மதுரை சென்றடைகிறது. நீண்ட கால இடைவெளிக்கு பிறகு நேரடியாக துவங்கப்பட்டுள்ள இந்த ரயில் சேவைக்கு பயணிகளிடையே வரவேற்பு கிடைத்துள்ளது.
அதே சமயம் இந்த ரயிலில் போத்தனூர், கிணத்துக்கடவு ஆகிய ரயில் நிலையத்திற்கு செல்ல அதிக கட்டணமாக 30 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் இதனை குறைக்க வேண்டுமெனவும் பயணிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: புனலூர் - கொல்லம் புதிய மின்மய அகல ரயில் பாதை... பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்