கோயம்புத்தூர்: கருமத்தம்பட்டி அடுத்த கோதபாளையம் கிராமத்தில் உள்ள கௌசிகா நதியோரத்தில் அதிகளவு மான்கள் வசிக்கின்றன. இந்த பகுதி பாதுகாக்கப்பட்ட வசிப்பிடமாகவும் திகழ்கிறது. இங்கிருந்து மான்கள் வழித்தவறி அடிக்கடி அருகிலுள்ள பகுதிகளுக்கு செல்வது வழக்கம்.
இந்நிலையில், கருமத்தம்பட்டி சென்னி ஆண்டவர் கோயில் அருகே உள்ள வினோபா நகர் பகுதிக்குள் இன்று (பிப். 21) புள்ளிமான் ஒன்பு வந்துள்ளது. அப்போது அங்கிருந்த தெருநாய்கள் மானை துரத்தி கடித்துள்ளது. இதனைப் பார்த்த அருகில் இருந்த பொதுமக்கள் நாய்களை விரட்டி மானை மீட்டனர்.
பின்னர், மானிற்கு முதலுதவி செய்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வருவதற்குள் மான் உயிரிழந்துவிட்டது. பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், மதுக்கரை வனத்துறையினரிடம் உயிரிழந்த மானை ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க: 'ஊருக்குள் புகுந்த காட்டுயானைகள்!'