சென்னை: மனித கடத்தலுக்கு எதிரான உலக விழிப்புணர்வு தின நிகழ்ச்சி சென்னை ராணி மேரி கல்லூரியில் இன்று (ஜூலை 30) நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை இயக்குநர் ரத்னா கலந்து கொண்டனர்.
இதில் மனித கடத்தல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. அப்போது பேசிய அமைச்சர் கீதா ஜீவன், "மாணவர்களுக்கு நேர திட்டமிடல் மிக முக்கியனது. சமூக வலைதளங்களில் மூழ்கி போகாமல் செயல்பட வேண்டும். செய்திகள், சிறந்த திரைப்படங்களை தேர்ந்தெடுத்து பாருங்கள். ஆனால், பெண்களை அடிமைகளாக சித்தரிக்கும் நாடகங்களை தவிருங்கள்" என்றார்.
இதைத் தொடர்ந்து பேசிய கனிமொழி, "உலகளவில் மனித கடத்தல் நடைபெறுகிறது. மனித உறுப்பு திருட்டு, பாலியல் தொழில் உள்ளிட்டவைகளில் ஈடுபடுத்த மனித கடத்தல் நிகழ்த்தப்படுகிறது. வளர்ந்த நாடுகளிலும் கொத்தடிமை முறை இருக்கிறது. மனித கடத்தலுக்கு எதிராக ஆழமான சட்டம் தேவை என்ற அழுத்தம் மத்திய அரசுக்கு உள்ள போதிலும் வலுவான மசோதாவை நிறைவேற்றாமல் இருக்கிறது.
விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்றார். அதோடு செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடியுடன் இணக்கமாக இருக்கிறாரே. வரும் காலங்களில் கூட்டணி அமையுமா என்று நிரூபர் எழுப்பிய கேள்விக்கு, “நிச்சயம் இல்லை” என்று பதிலளித்தார்.
இதையும் படிங்க: ராஜஸ்தானிலிருந்து கேரளாவிற்கு 12 சிறுமிகள் கடத்தல்... பாதிரியார் உள்பட 3 பேர் கைது....