தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. மாநிலத்தில் நாள்தோறும் ஐந்தாயிரம் பேர் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டுவந்த நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை குறைய தொடங்கியுள்ளது.
இந்நிலையில், கோவையில் இன்று 389 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்த மாவட்டத்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 38 ஆயிரத்து 315ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த 452 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பினர். இதனால் மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்து 105ஆக அதிகரித்துள்ளது.
மேலும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 507ஆக அதிகரித்துள்ளது.