ETV Bharat / city

மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு: கோவையில் என்ஐஏ அதிரடி சோதனை

கோவையில் மாவோயிஸ்டுகளுடன் தொடர்பில் இருந்ததாகக் கைதுசெய்யப்பட்ட மூவரின் இல்லங்களில் என்ஐஏ சோதனை மேற்கொண்டுவருகிறது.

மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு
மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு
author img

By

Published : Oct 12, 2021, 10:05 AM IST

Updated : Oct 12, 2021, 11:13 AM IST

தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களில் மாவோயிஸ்ட் அமைப்புடன் தொடர்பில் இருக்கும் நபர்களின் இடங்கள், இல்லங்களில் இன்று (அக்டோபர் 12) தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அலுவலர்கள் சோதனை மேற்கொண்டுவருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவையின் மூன்று இடங்களில் சோதனையானது நடைபெறுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மாவோயிஸ்டுகளுடன் ஆதரவாக இருந்ததாகக் கூறி கோவை புலியகுளம் பகுதியில் வசித்துவந்த மருத்துவர் தினேஷ், டேனிஷ் ஆகிய இருவரை கேரள காவல் துறையினர் கைதுசெய்து கேரள சிறையில் அடைத்துள்ளனர்.

யார் இந்த சந்தோஷ்?

இந்நிலையில் இன்று அவர்களது இல்லங்களில் என்ஐஏ அலுவலர்கள் சோதனை நடத்திவருகின்றனர். அதேபோன்று பொள்ளாச்சியில் சந்தோஷ் என்பவருடைய இல்லத்திலும் சோதனையானது நடைபெற்றுவருகிறது. சந்தோஷ் என்பவர் இதுவரை கைதுசெய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பொள்ளாச்சியை அடுத்துள்ள அங்கலக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் 2014ஆம் ஆண்டு மே மாதம் காணாமல்போனதாக அவரது தந்தை அர்ஜுனன் ஆழியார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இந்த நிலையில் காணாமல்போனதாகச் சொல்லப்பட்ட சந்தோஷ், மாவோயிஸ்ட் இயக்கத்துடன் சேர்ந்து கேரள மாநிலம் வயநாடு பகுதியில் பதுங்கியிருந்தது தெரியவந்தது.

சந்தோஷை சரணடையுமாறு எச்சரித்த என்ஐஏ

இதையடுத்து மாவோயிஸ்ட் இயக்கத்தில் இணைந்த சந்தோஷ் மீது கேரள மாநிலம் வயநாடு பகுதியில் 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாகவும், இது தொடர்பாக அம்மாநில மாவோயிஸ்ட் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் சந்தோஷ் தொடர்பான வழக்கின் மீது விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில் பொள்ளாச்சி அடுத்த அங்கலக்குறிச்சி பகுதியில் உள்ள சந்தோஷின் வீட்டில் அவரது தந்தை, அவரது தாய் கலைச்செல்வி ஆகியோரிடம் நான்கு பேர் கொண்ட தேசிய புலனாய்வுப் பிரிவு அலுவலர்கள் நேற்று இரவு முதல் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இது தொடர்பாக காவல் துறையினர் சந்தோஷின் பெற்றோரிடம் அவரை சரண் அடையுமாறு தெரிவித்துள்ளனர்.

அங்கலக்குறிச்சியில் பரபரப்பு

மேலும் சந்தோஷின் நண்பரிடமும் என்ஐஏ அலுவலர்கள் தொலைபேசி வாயிலாக விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இதனால் அங்கலக்குறிச்சி பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீரை சுற்றி வளைத்த என்ஐஏ.. 16 இடங்களில் ரெய்டு!

Last Updated : Oct 12, 2021, 11:13 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.