ETV Bharat / city

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்! - அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என மாநிலம் முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

communist-party-protests-against-anna-university-dean

author img

By

Published : Oct 20, 2020, 10:02 PM IST

கோவையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் இருக்கும் ஆசிரியர் மற்றும் ஊழியர்களுக்கு 2015 ஆம் ஆண்டில் இருந்து வழங்கப்பட்டு வந்த மருத்துவ விடுப்பு, சிறப்பு செயல் விடுப்புகள் ஆகியவை இனிமேல் வழங்கப்படாது என்று சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா சில தினங்களுக்கு முன்பு அறிக்கை ஒன்றை விடுத்திருந்தார்.

இதனைக் கண்டித்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இன்று கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சி.பி.ஐ.எம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாராளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.நடராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏறாளமானோர் கலந்து கொண்டு, சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை கண்டித்தும், அவர் பதவி விலகிட வேண்டும் என்றும் முழக்கங்களை எழுப்பினர்.

அண்ணா பல்கலை., துணைவேந்தரை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

அதேபோல் சேலம், திருச்சி, தூத்துக்குடி, திருவாரூர், கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களிலும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க:நீட் தேர்வு 2020: மாநில அளவில் 3ஆம் இடம் பிடித்த மாற்றுத்திறனாளி மாணவி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.