கோயம்புத்தூ: மத்திய பொறியியல், தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஐடி, என்ஐடி போன்ற உயர் தொழில் நுட்ப கல்வி நிறுவனங்களில் இளநிலைப் பொறியியல், தொழில்நுட்ப பட்டப்படிப்புகளில் சேர ஜேஇஇ நுழைவுத் தேர்வில் (Joint Entrance Examination - JEE), முதல் நிலை தேர்வு மற்றும் முதன்மை தேர்வு என இருகட்டமாக நடத்தப்படும்.
இந்நிலையில், இந்தாண்டு ஜேஇஇ நுழைவுத் தேர்வின் முதற்கட்டமாக 7 லட்சத்து 69 பேர் எழுதிய முதல்நிலை தேர்வில் கோவையைச் சேர்ந்த தீக்ஷா திவாகர் என்ற மாணவி 100-க்கு 99.998 மதிப்பெண்கள் பெற்று தமிழ்நாடு அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
கோவை காளப்பட்டி சாலையிலுள்ள சுகுணா பள்ளியில் பயின்ற மாணவிக்கு பள்ளி சார்பாக இன்று (ஜூலை 13) பாராட்டு விழா நடைபெற்றது. இதில் அப்பள்ளியைச் சேர்ந்தவர்கள் மற்றும் மாணவியின் பெற்றோர் ஆகியோர் கலந்து மாணவிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இதையும் படிங்க: 21 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஜேஇஇ நுழைவுத் தேர்வு பயிற்சி!