கோயம்புத்தூர்: பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா முகமது நபிகள் குறித்து அவதூறாக பேசியதை அடுத்து உலகம் முழுவதும் உள்ள பல்வேறு இஸ்லாமிய நாடுகளில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து அவரை பாஜக செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
மேலும் அவருக்கு எதிராக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் நுபுர் சர்மா முகமது நபிகள் குறித்து தெரிவித்த கருத்துக்கு ஆதரவாக கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் சமூக வலைதளங்களில் பல்வேறு பதிவுகளை செய்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து அவர் சமூக வலைதளங்களில் நுபுர் சர்மாவிற்கு ஆதரவாகவும் பிரிவினையை ஏற்படுத்தும் விதமாக பதிவு செய்ததையும் அடுத்து கார்த்திக்கை கைது செய்த போலீசார் அவரிடம் ரகசிய இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: IND VS SA 3rd T20: தென்னாப்பிரிக்காவை திணறடித்தது இந்தியா; தொடரில் முதல் வெற்றி!