கோயம்புத்தூர்: மத்வராயபுரம் ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர், கிட்டுச்சாமி. பழங்குடியினத்தவருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தின் அடிப்படையில் ஊராட்சித் தலைவராக இரண்டு ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், தன்னைப் பணி செய்யவிடாமல் ஆதிக்க சாதி கவுன்சிலர்கள் தடுப்பதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
அவர் அளித்த புகாரில், "பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதால், ஆதிக்கச் சாதியை சார்ந்த நான்கு கவுன்சிலர்களோடு பழங்குடியினத்தைச் சார்ந்த ஒரு கவுன்சிலரும் சேர்ந்து (மூர்த்தி, ஜோதிமணி, ராணி, நாகராஜ், முருகேஷ்) தன்னைப் பணி செய்ய விடாமல் தடுத்து வருகின்றனர்.
ஊராட்சி மன்றக் கூட்டத்தினை நடத்தவிடாமல் தடுத்து வருகின்றனர். ஐந்து பேரும் தாங்கள் தேர்தலுக்குச் செலவு செய்த ஆறு லட்சத்தை எப்படி எடுப்பது எனக் கூறி, தங்களுக்கு மாதந்தோறும் ஒரு தொகை வழங்க வேண்டும் என மிரட்டுகின்றனர்.
மேலும், தூய்மைப்பணியாளர்கள், பிளம்பர், தண்ணீர் விடுபவர் உள்ளிட்டவர்களையும் பணி செய்யவிடாமல் தடுத்து வருகின்றனர். இதனால், மத்வராயபுரம் ஊராட்சியில் அடிப்படை மற்றும் அவசரப் பணிகளை மேற்கொள்ள முடியாமல், சிரமப்படுகிறோம். ஆதிக்க கவுன்சிலர்கள், பழங்குடியினத்தைச் சார்ந்த தன்னை கேவலமாக பார்ப்பதோடு, மிரட்டி வருகின்றனர்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க: CCTV காட்சி: ஆட்டோ மீது லாரி மோதி விபத்து - 2 பேர் உயிரிழப்பு