ETV Bharat / city

கோவை புத்தகக் கண்காட்சி: லட்சக்கணக்கான புத்தகங்களுடன் தொடங்கியது

கோயம்புத்தூர்: கொடிசியா சிறுதொழில்கள் சங்கம் சார்பில் 2019ஆம் ஆண்டுக்கான புத்தகக் கண்காட்சி, கோவையில் நேற்று தொடங்கியது.

கோவை புத்தகக் கண்காட்சி
author img

By

Published : Jul 20, 2019, 7:56 AM IST

கோவை கொடிசியா சிறுதொழில்கள் சங்கம் சார்பாக ஆண்டுதோறும் நடைபெறும், "கோயம்புத்தூர் புத்தகக் கண்காட்சி 2019" கொடிசியா வளாகத்தில் நேற்று தொடங்கியது. இதனை மாவட்ட ஆட்சியர் இராசாமணி தொடக்கி வைத்தார்.

கொடிசியா வளாகத்தில் ஜூலை 19 முதல் 28ஆம் தேதி வரை நடைபெறும் புத்தகக் கண்காட்சி

ஜூலை 19 முதல் 28ஆம் தேதி வரை நடைபெறும் இந்த புத்தகக் கண்காட்சியில் உள்ள 250 அரங்குகளில், 150 பதிப்பகங்கள் இடம் பெற்றுள்ளன. தமிழ், மலையாளம், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழி புத்தகங்கள் இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. முதல் நாளான நேற்று, ஏராளமான கல்லூரி மாணவர்கள் புத்தகக் கண்காட்சிக்கு வருகை புரிந்தனர்.

இதுகுறித்து கல்லூரி மாணவர்கள் கூறுகையில், இணையதளங்கள், கைப்பேசிகள் மூலம் படிப்பதைக் காட்டிலும், புத்தகம் படிப்பது ஒரு இனிமையான அனுபவத்தைத் தரும் எனவும், புத்தகத்தின் ஒவ்வொரு பக்கங்களிலிருந்து வரும் வாசம், அதில் கிடைக்கும் மகிழ்ச்சி இணையதளத்தில் கிடைக்காது எனவும் தெரிவித்தனர்.

Intro:கோவையில் புத்தக கண்காட்சி துவங்கியது ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன கல்லூரி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமுடன் புத்தகங்களை வாங்கிச் செல்கின்றனர்

Body:கோவை கொடிசியா சிறுதொழில்கள் சங்கம் சார்பாக கோயம்புத்தூர் புத்தக திருவிழா 2019 என்ற புத்தக கண்காட்சி கொடிசியா வளாகத்தில் இன்று துவங்கியது இதனை மாவட்ட ஆட்சியர் இராசாமணி துவக்கி வைத்தார் பின்னர் அரங்குகளை பார்வையிட்ட அவர் பாரதியார் கவிதைகள் உள்ளிட்ட பல்வேறு புத்தகங்களை ஆர்வமாக வாங்கினார் கொடிசியா வளாகத்தில் ஜூலை 19 முதல் 28ம் தேதி வரை இந்த புத்தக கண்காட்சி நடைபெறும் நடைபெற உள்ளது 250 அரங்குகளில் 150 பதிப்பகங்கள் பங்கு பெற்றுள்ளனர் இந்த புத்தக கண்காட்சியில் கலை இலக்கியம் அறிவியல் கல்வி உடல்நலம் சமையல் குறிப்பு ஆன்மீகம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள் உள்ளன தமிழ் மலையாளம் ஹிந்தி ஆங்கிலம் ஆகிய மொழி புத்தகங்கள் இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது துவக்க நாளான இன்று ஏராளமான கல்லூரி மாணவர்கள் புத்தக கண்காட்சிக்கு வந்து புத்தகங்களை அள்ளிச் சென்றனர் இதுகுறித்து கல்லூரி மாணவர்கள் கூறுகையில் சிறுவயது முதலே புத்தகம் வாசிப்பதில் தங்களுக்கு அதிக ஆர்வம் இருந்துள்ளதாகவும் புத்தகம் வாசிக்க செலவு செய்யும் பணம் அது ஒரு முதலீடு எனவும் நாம் இறந்த பின்னரும் நம்முடைய வாழ்க்கை முறையை மற்றவர்களுக்கு தெரியப்படுத்தும் என கூறினர் மேலும் இணையதளங்கள் செல்போன்கள் மூலம் படிப்பதை காட்டிலும் புத்தகம் படிப்பது ஒரு இனிமையானது எனவும் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கங்களில் இருந்து வரும் வாசம் அதனை திருப்பும் போது கிடைக்கும் மகிழ்ச்சி இணையதளத்தில் கிடைக்காது எனவும் மாணவர்கள் தெரிவித்தனர் இந்த கண்காட்சி மூலம் வெளியில் கிடைக்காத புத்தகங்கள் கிடைப்பதாகவும் சலுகை விலையில் அதிக புத்தகங்கள் கண்காட்சியில் வாங்க முடியும் எனவும் இதுபோன்ற புத்தகக் கண்காட்சிகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் எனவும் மாணவர்கள் தெரிவித்தனர் மேலும் இந்த புத்தக கண்காட்சியில் சிறுவர்களுக்கான புத்தகங்கள் ஆன்மீகம் சார்ந்த புத்தகங்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.