கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சென்னையை விட, கோயம்புத்தூரில் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் கரோனா தடுப்புப் பணிகளை இன்று(மே.30) ஆய்வு செய்கிறார்.
முன்னதாக, காலை 10 மணியளவில் ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். அதைத்தொடர்ந்து, திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய மருத்துவச் சேவை மையத்தைத் தொடங்கி வைக்கிறார்.
அதையடுத்து, கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் ஆய்வு மேற்கொள்கிறார். இறுதியாக, மூன்று மாவட்ட ஆட்சியர்கள், சுகாதாரத் துறை அலுவலர்கள் பங்கேற்கும் கரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் கலந்து கொண்டு பேசுகிறார்.
இதையும் படிங்க: முதலிடத்தில் கோவை - விசிட்டடிக்கும் முதலமைச்சர்!