கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் விமானதளத்தில் பணிபுரியும் விமானப்படை வீரர்களின் குழந்தைகள் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் படித்து வருகின்றனர். பலத்த பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் அப்பள்ளியில் படிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் கேடல், வருண் ஆகியோர் மாயமாகியுள்ளனர்.
நேற்று காலை பள்ளிக்கு சென்றவர்கள் வீடு திரும்பாததால் மாணவர்களின் பெற்றோர்கள் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து சூலூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது மாணவர்கள் இருவரும் நேற்று காலை சைக்கிளில் பள்ளியில் இருந்து வெளியேறும் காட்சிகள் பதிவாகி இருப்பது தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்க: