ETV Bharat / city

வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையர்கள் கைது - நகை பறிப்பு

பொள்ளாச்சி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியை மறித்து பெண்ணின் கழுத்திலிருந்த இரண்டு சவரன் நகையை கொள்ளையடித்துச் சென்ற இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையர்கள் கைது
வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையர்கள் கைது
author img

By

Published : Aug 31, 2021, 12:28 AM IST

கோயம்புத்தூர்: சாய்பாபா காலனியைச் சேர்ந்தவர் திருநாவுகரசு (54). இவரது மனைவி ஆனந்தி (52).

இவர்களுக்கு சொந்தமான தோட்டம் கிணத்துக்கடவு அடுத்த வடசித்தூரில் உள்ளது. இவர்கள் கடந்த வாரம் 24ஆம் தேதி தோட்டத்தை சுத்தம் செய்ய இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்று, இடத்தை சுத்தம் செய்து விட்டு பனப்பட்டியிலுள்ள தனது உறவினர் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தனர்.

செயின் பறிப்பு

அப்போது ஆத்துமேடு பகுதி அருகே செல்லும்போது பின்னால் பின்தொடர்ந்து வந்த இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அனிந்து வந்த இருவர், ஆனந்தி, திருநாவுகரசிடம் கத்தியை காட்டி மிரட்டி ஆனந்தி கழுத்தில் இருந்த இரண்டு சவரன் தங்க செயினை அறுத்துவிட்டு தப்பிச் சென்றனர்.

இது குறித்து ஆனந்தி நெகமம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் (ஆக.29) மாலை வடசித்தூர் மேட்டுகடை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றுகொண்டிருந்த இருவரை ரோந்து பணியிலிருந்த காவல் துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர்.

இருவர் கைது

அப்போது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியுள்ளனர். இதனால், சந்தேகமடைந்த காவல் துறையினர், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர்கள் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையைச் சேர்ந்த வாசிம் கான் (38), தஞ்சாவூர் மாவட்டம் அதிரப்பட்டினத்தைச் சேர்ந்த முகமது அசுரப் (21) எனத் தெரியவந்தது.

மேலும், பெண்ணிடம் நகையை கொள்ளையடித்துச் சென்றதும் தெரியவந்தது. உடனடியாக அவர்களை கைது செய்த காவல் துறையினர், அவர்களிடம் இருந்த இரண்டு சவரன் நகையை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: ’மெட்ரோ’ படம் பார்த்து செயின் பறிப்பில் ஈடுபட்ட இளைஞர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.